ஊரடங்கு நீட்டிப்பு குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

LATEST NEWS

கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

CLICK AND VIEW FULL DETAILS

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.

மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.

ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

சில முக்கிய அம்சங்கள்

► ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.

► ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

► மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.

► மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி.

► சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.

► ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.

► கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.

► மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

► நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.

► கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகளை திறக்க அனுமதி.

► அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்.

► முககவசம் அணிவது கட்டாயம்

► மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதி

CLICK AND VIEW FULL DETAILS