தமிழகத்தில் 85 சதவீதம் தெரிந்தது

அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் திருப்பூர் நீங்கலாக பல பகுதிகளில் நன்றாக தெரிந்தது.

CLICK AND VIEW ADVERTISEMENT

இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்வு  11.19 மணி வரை நீடித்தது. சரியாக 9.35 மணி அளவில் சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலை பெற்றிருந்தது. அதற்கு பிறகு நிலவு, சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைத்தது. அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றியது.

பல்வேறு இடங்களில் பல்வேறு வண்ணம்

சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நிறத்தில் தோன்றியது. ஊட்டியில் சிவப்பு நிறத்திலும், ஒடிசாவில் ஊதா நிறத்திலும் காணப்பட்டது. கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும், இந்தியாவில் ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.

CLICK AND VIEW ADVERTISEMENT

இதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளித்தது. அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடிந்தது. அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததை காண முடிந்தது.

தமிழகத்தில் சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணமுடிந்தது. அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடிந்தது.

இன்று ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ந்தேதிதான் நிகழும்.

CLICK AND VIEW ADVERTISEMENT

சபரிமலை கோயிலின் நடைஅடைப்பு:

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை காலை 7.47 மணி அளவில் சாத்தப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடை திறப்பு:

காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலின் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய கிரகணத்தை ஒட்டி பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்படும் நிலையில் சனீஸ்வரர் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது.

CLICK AND VIEW ADVERTISEMENT

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை செய்துள்ளது. மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அனுமதித்த நிலையில் சூரிய கிரகணத்தால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

துறையூரில், கரூர், திருச்சி இன்னும் சில இடங்களில் நாம் வெறும் கண்ணில் பார்க்க முடிந்த சூரியகிரகன படங்கள்

CLICK AND VIEW ADVERTISEMENT
CLICK AND VIEW ADVERTISEMENT
CLICK AND VIEW ADVERTISEMENT

By @cscttamilpasanga

Proudly powered by CSC TAMIL PASANGA

error: Content is protected !!