தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது

உள்ளாட்சித் தேர்தல்

CLICK AND VIEW ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ந் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது

ஜனவரி 2ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும்

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வரும் 6ந் தேதி தொடங்கும்

உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 13

ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் ஒரே நாளில் நடைபெறும்

கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்

தேர்தல் ஆணையம் விளக்கம்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிப்பு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பிறகு அறிவிக்கப்படும்

நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்

உள்ளாட்சித் தேர்தல்

வேட்பு மனு தாக்கல் – டிசம்பர் 6

வேட்பு மனு கடைசி நாள் – டிசம்பர் 13

வேட்பு மனு பரிசீலனை – டிசம்பர் 16

வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் – டிசம்பர் 18

முதற்கட்ட தேர்தல் – டிசம்பர் 27

2ம் கட்ட தேர்தல் – டிசம்பர் 30

வாக்கு எண்ணிக்கை – ஜனவரி 2

மறைமுக தேர்தல் – ஜனவரி 11

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் – 2019

2019ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் 

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் 2019 – தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் 

CLICK AND VIEW ADVERTISEMENT

By @cscttamilpasanga

Proudly powered by CSC TAMIL PASANGA

error: Content is protected !!