Bank Jobs 2021: ஐ.டி.பி.ஐ வங்கி வேலைவாய்ப்பு 2021, 900க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!

IDBI 2021ம் ஆண்டுக்கான வங்கி ஊழியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு. 900க்கு மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதி உடையவர்கள் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

ஹைலைட்ஸ்:

  • IDBI 2021ம் ஆண்டுக்கான வங்கி ஊழியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு.
  • 900க்கு மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தகுதி உடையவர்கள் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
IDBI Bank to set off accumulated losses worth Rs 45,586-crore | Business  Standard News

ஐ.டி.பி.ஐ வங்கி (IDBI) Industrial Development Bank of India நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 04.08.2021 அன்று இந்த அறிவிப்பை ஐ.டி.பி.ஐ வங்கி நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.டி.பி.ஐ வங்கி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 920 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.idbi.com என்ற ஐ.டி.பி.ஐ வங்கியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

நிறுவனத்தின் பெயர்Industrial Development Bank of India (IDBI)
பணிநிர்வாகி
காலியிடங்களின் எண்ணிக்கை920
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி04.08.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி18.08.2021
பணி நியமிக்கும் இடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரபூர்வ வலைத்தளம்www.idbi.com

பிரிவு அடிப்படையில் காலி இடங்கள்

பணி பெயர்பொது பிரிவுஎஸ்சிஎஸ்.டிஓபிசிEWSPWDமொத்தம்
நிர்வாகி373138692489236920

கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)

வயது வரம்பு

குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

வயது தளர்வு

பிரிவுதளர்வுகள்
பட்டியல் சாதி/ பழங்குடி மக்கள்5 ஆண்டுகள்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்3 ஆண்டுகள்
“குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உரிமைகள் சட்டம், 2 0 1 6” இன் கீழ் வரையறுக்கப்பட்ட குறைபாடுகள் உள்ள நபர்கள்10 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள், அவசர ஆணையிடப்பட்ட அதிகாரிகள் (ECO கள்)/ குறுகிய சேவை அதிகாரிகள்5 ஆண்டுகள்
01.01.1980 முதல் 31.12.1989 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பொதுவாக வசிக்கும் நபர்கள்5 ஆண்டுகள்
1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள்5 ஆண்டுகள்

ஐ.டி.பி.ஐ ஆட்சேர்ப்பு செயல்முறை:

ஆன்லைன் முறை

தனிப்பட்ட நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம்

எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி- ரூ.200 (அறிவிப்பு கட்டணம் மட்டும்)

மற்றவர்களுக்கு- ரூ 1000 (அறிவிப்பு கட்டணம் + விண்ணப்ப கட்டணம்)

ஊதிய அளவு:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கீழ்க்கண்டவாறு ஊதியம் அளிக்கப்படும்.

  • முதல் ஆண்டு மாத சம்பளம்- ரூ.29,000
  • இரண்டாம் ஆண்டு மாத சம்பளம்- ரூ.31,000
  • மூன்றாம் ஆண்டு மாத சம்பளம்- ரூ.34,000

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.08.2021

விண்ணப்பிக்க இறுதி தேதி: 18.08.2021

ஆன்லைன் தேர்விற்கான தேதி: 05.09.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.