10, 12ம் வகுப்பு & ITI படித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021

NCR என்றழைக்கப்படும் நார்த் சென்ட்ரல் ரயில்வே 10, 12 & ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 1600+ கும் மேற்பட்ட பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் 01/09/2021.

ஹைலைட்ஸ்:
- NCR என்றழைக்கப்படும் நார்த் சென்ட்ரல் ரயில்வே 10, 12 & ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.
- இந்தியா முழுவதும் 1600+ கும் மேற்பட்ட பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- விண்ணப்பிக்க கடைசி நாள் 01/09/2021.

வட இந்திய மத்திய இரயில்வே (North Central Railway) துறையானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.
புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 27 ஜூலை 2021 அன்று இந்த அறிவிப்பை வட இந்திய மத்திய இரயில்வே துறையானது வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான வட இந்திய மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 1664 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://ncr.indianrailways.gov.in/ என்ற வட இந்திய மத்திய இரயில்வேயின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.
நிறுவனத்தின் பெயர் | North Central Railway Recruitment |
பணி | அப்ரண்டிஸ் |
காலியிடங்களின் எண்ணிக்கை | 1664 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 02.08.2021 |
விண்ணப்பிக்க இறுதி தேதி | 01.09.2021 |
பணி நியமிக்கும் இடம் | இந்தியா முழுவதும் வேலைகள் உண்டு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://ncr.indianrailways.gov.in/ |
கல்வி தகுதிகள்
10 அல்லது 12 ஆவது படிப்பை அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் முடித்திருக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 50 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
ஆனால் வெல்டர் மற்றும் வயர்மேன் போன்ற பதவிகளுக்கு குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
தொழில்நுட்ப தகுதிகள்
ஐ.டி.ஐ/ என்.சி.வி.டி/ எஸ்.சி.வி.டி போன்ற படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 01 ஆண்டுக்காலம் பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை:
தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் ஒரு வருட காலத்திற்கு உதவித்தொகை பெறுவார்கள். சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தற்போதைய விதிகளின்படி பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ண்ப்பிப்பவர்களுக்கு 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 24 வயது இருக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம்- ரூ.100
எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.