இந்திய விமானப்படையில் உதவியாளர்கள் வேலைவாய்ப்பு 2021

இந்திய விமானப்படையில் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்கள் அறிவிப்பு. இந்தியா முழுக்க பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 30ம் தேதி 2021.

ஹைலைட்ஸ்:

  • இந்திய விமானப்படையில் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்கள் அறிவிப்பு.
  • இந்தியா முழுக்க பணியிடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 30ம் தேதி 2021.
Despite Rafale Jets & Fancy Choppers, Why Indian Air Force Is Still The  Weakest Link In India's Armed Forces?

இந்திய விமானப்படை (Indian Air Force) அமைப்பானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 26 ஜூலை 2021 அன்று இந்த அறிவிப்பை இந்திய விமானப்படை அமைப்பானது வெளியிட்டுள்ளது.

AFCAT/NCC Special Entry in Indian Air force for Graduates | Indian air force

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 85 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க www.indianairforce.nic.in என்ற இந்திய விமானப்படையின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

நிறுவனத்தின் பெயர்இந்திய விமானப்படை
காலியிடங்களின் எண்ணிக்கை85
விண்ணப்பம் சமர்ப்பிக்க ஆரம்ப தேதி30 ஜூலை 2021
விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி தேதி30 ஆகஸ்ட் 2021
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
வேலைக்கான இடம்இந்தியா முழுவதும்
அதிகாரபூர்வ வலைத்தளம்www.indianairforce.nic.in

சமையல் ஆள் (Cook) – 05

மெஸ் பணியாளர் (Mess Staff) – 09

பல வேலை செய்யும் பணியாளர் (Multi Tasking staff (MTS)) – 17

இந்தி தட்டச்சு பணியாளர் (Hindi Typist) – 04

ஹவுஸ் கீப்பிங் (House Keeping Staff) – 15

கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) – 10

கடை பணியாளர் (Store Keeper) – 03

தச்சு வேலை (Carpenter) – 02

கடை கண்காணிப்பாளர் (Supt (store)) – 15

பெயிண்டர் (Painter) – 01

மெக்கானிக்கல் ட்ரான்ஸ்போர்ட் டிரைவர் (Civilian Mechanical Transport Driver) – 03

மொத்தம் – 85

கல்வித்தகுதி

விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகத்தில் அல்லது வாரியத்தில் பட்டம் அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு 18 முதல் 25 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்

சம்பள அளவு

ரூ.18000 முதல் ரூ 56,900 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் குறித்து அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சரி பார்க்கவும்.

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும். பணி கிடைக்க வாழ்த்துகிறோம்.