ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. 

AMP
Current

9 மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அதிரடி. 

தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டு கட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஏற்கனவே, நடைபெற்று வந்த உள்ளாட்சி தேர்தல் வழக்குகளோடு சேர்த்து, இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

CLICK AND VIEW ADVERTISEMENT
Current

அப்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை நோக்கி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால் வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டாமா?என்றும், புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடிக்காவிடில் குழப்பம் ஏற்படாதா? என்றும், நீதிபதிகள் வினவினர். அப்போது, புதிதாக மாவட்டங்களை பிரிக்கும்போது வார்டு மறுவரையறை அவசியம் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்தே அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டதாக அவர் கூறினார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

Current

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வார்டு மறுவரையறை பணிகள் முடிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் தங்களால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்று கூறினர்.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தடை விதித்தால் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்குமாறும், இல்லையேல் குழப்பம் தான் ஏற்படும் என்றும் வாதிட்டார்.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா என்று வினவிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்தும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தொடர்பாகவும், பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்க, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

Current

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.15 மணியளவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற கருத்துபடி, 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. இதற்கு, திமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும், விளக்கங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Current
CLICK AND VIEW ADVERTISEMENT

By @cscttamilpasanga

Proudly powered by CSC TAMIL PASANGA

error: Content is protected !!